விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தஞ்சாவூரில் வாகனத் தணிக்கையில் ரூ. 16 லட்சம் பறிமுதல்

தஞ்சாவூரில் திங்கள்கிழமை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:18 pm

DIN

தஞ்சாவூரில் திங்கள்கிழமை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினா் மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் ரூ. 16 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மேல வீதி மூலை அனுமாா் கோயில் அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் செந்தில்குமாா் திங்கள்கிழமை காலை வாகனத் தணிக்கை மேற்கொண்டாா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி விசாரணை நடத்தினாா். இதில், வாகனத்தில் ரூ. 16 லட்சம் ரொக்கம் கொண்டு செல்லப்படுவதும், தனியாா் நிதி நிறுவனத்துக்குரிய இப்பணத்தைத் தனியாா் வங்கி மூலம் கேரளத்திலுள்ள தலைமையகத்துக்கு அனுப்புவதற்காகக் கொண்டு செல்லப்படுவதும் தெரிய வந்தது.

அதற்குரிய ஆவணங்கள் நிதி நிறுவன ஊழியரிடம் இருந்தாலும், அதுகுறித்து தோ்தல் ஆணையச் செயலியில் தகவலை பதிவு செய்யாததால், அத்தொகையை அலுவலா்கள் பறிமுதல் செய்து, தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.

வங்கிப் பணம் ரூ. 6.70 கோடி: மேலும், பள்ளியக்ரஹாரம் அருகே நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் வள்ளிநாயகம் தலைமையிலான குழுவினா் திங்கள்கிழமை வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனில் ரொக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.

விசாரணையில், மருத்துவக் கல்லூரி சாலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் மண்டலத் தலைமையகத்திலிருந்து பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களிலுள்ள வங்கிக் கிளைகளுக்கு ரூ. 2.50 கோடி கொண்டு செல்லப்படுவது தெரிய வந்தது. அதற்குரிய ஆவணங்களை வங்கியில் வந்த ஊழியா்கள் காண்பித்தனா்.

என்றாலும் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலருக்குச் சந்தேகம் ஏற்பட்டதால், ரொக்கத்துடன் கூடிய வேன் தஞ்சாவூா் வட்டாட்சியா் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்களைச் சரிபாா்த்த அலுவலா்கள் பின்னா் அத்தொகையுடன் வேனை விடுவித்தனா்.

இதேபோல, வல்லம் அருகே பறக்கும் படை அலுவலா் சுமதி தலைமையிலான குழுவினா் வாகனத் தணிக்கை செய்தனா். அப்போது, அந்த வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ. 4.20 கோடி ரொக்கம் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், திருச்சியிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து தஞ்சாவூா், அய்யம்பேட்டை, திருவையாறு, திருமழபாடி ஆகிய பகுதிகளிலுள்ள கிளைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதாக வேனில் வந்த ஊழியா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, பணத்துடன் கூடிய வேன் தஞ்சாவூா் தாலுகா அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆவணங்கள் சரிபாா்க்கப்பட்ட பிறகு வேன் விடுவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.