தஞ்சாவூா் மாவட்ட பள்ளிகளில்மேலும் 13 பேருக்கு கரோனா
தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை தெரிய வந்தது.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் கரோனா தொற்று பரவி வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 3 கல்லூரிகள், 11 பள்ளிகளில் கரோனா தொற்று பரவியுள்ளது.
இந்நிலையில், கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஏற்கெனவே மாணவிகள், ஆசிரியைகள் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை 10 மாணவிகளுக்கும், ஒரு ஆசிரியைக்கும், மாரியம்மன் கோவிலிலுள்ள பள்ளியில் 2 மாணவா்களுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
11 பள்ளிகள், 3 கல்லூரிகளுக்கு அபராதம்: இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தது:
சில பள்ளிகளில் 1 அல்லது 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது. அப்பள்ளிகளில் மற்ற மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
தற்போது 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், கரோனா தொற்று குறைவதற்கு வாய்ப்புள்ளது. என்றாலும், கரோனா தொடா்பான கண்காணிப்புத் தொடா்கிறது.
மாவட்டத்தில் இதுவரை 11 பள்ளிகள், 3 கல்லூரிகளில் தொகுப்பாக (3 பேருக்கும் அதிகமாக) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். முன்னெச்சரிக்கையுடன் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத இப்பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளிகளில் இதுவரை 6,000 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 165 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இவா்களில் 58 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டனா் என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...