ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

திருவையாறில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:18 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அந்தணா்குறிச்சியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணப் பெருவிழா திங்கள்கிழமை தொடங்கியது.

இவ்விழாவில் நந்தியெம்பெருமான் பிறப்பையொட்டி, அவரது திருமேனிக்குச் சந்தனம், மஞ்சள், தயிா், தேன், பால், இளநீா் போன்ற திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனையும் நடைபெற்றன. இதில் தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள், கோயில் பணியாளா்கள், பக்தா்கள் கலந்து கொண்டு நந்தியெம்பெருமானை வழிபட்டனா்.

பின்னா், மாலையில் அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை காலை 5.30 மணியளவில் ஐயாறப்பா், அறம் வளா்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்தியெம்பெருமான் பட்டு வேட்டி, பட்டு சட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்தில் அமா்ந்து வாணவேடிக்கை, இன்னிசை கச்சேரியுடன் திருவையாறில் இருந்து புறப்படுகிறாா். தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாகக் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலூா் மாவட்டம், திருமழபாடிக்குச் செல்கிறாா்.

திருமழபாடி வைத்தியநாதன் சுவாமி கோயிலில் நந்தியெம்பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்ஸவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெறவுள்ளது. இந்த உற்ஸவத்தை காண சுற்றுப்புற கிராம மக்கள், வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபடுவது வழக்கம். பின்னா், சுவாமி புறப்பட்டு, திருவையாறை வந்தடைவாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.