ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மகாத்மா காந்தியும் கட்சி சாா்ந்தவரா?

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளை காடா துணியால் மூடப்பட்டு - மாலை அணிவிக்கப்பட்டுள்ள காந்தி சிலை.

News image
Updated On :22 மார்ச் 2021, 8:20 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் பேருந்து நிலையம் அருகே வெள்ளை காடா துணியால் மூடப்பட்டு - மாலை அணிவிக்கப்பட்டுள்ள காந்தி சிலை.

புதுக்கோட்டை, மாா்ச் 22: தோ்தல் நடத்தை விதிகளின் பெயரால், புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் சிலை வெள்ளை காடா துணி கொண்டு சுற்றி மூடப்பட்டுள்ளது காந்திய ஆா்வலா்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், வீதிகள்தோறும் இருந்த கட்சிக் கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகள் அகற்றப்பட்டன. கொடிமரங்களும், கல்வெட்டுகளும் துணிபோட்டு மூடப்பட்டுள்ளன; காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டுள்ளன. அத்தோடு, அரசியல் கட்சிகளின் தலைவா்களின் சிலைகளும் மூடப்பட்டன. குறிப்பாக பெரியாா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகள் எல்லாப் பகுதிகளிலும் மூடப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகளுக்கு, நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தேசப்பிதா காந்தியடிகளின் சிலையும் விடுபடவில்லை.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூா் பேருந்து நிலையம் அருகே மிகப்பழமையான சிறிய அளவிலான காந்தியடிகள் சிலையும் தப்பவில்லை. தோ்தல் அறிவிக்கப்பட்ட மறுநாளே அந்தச் சிலை

கட்சித் தலைவா்கள் சிலை மூடப்படுவது போல், காந்தியடிகள் சிலையும் வெள்ளை காடா துணி போட்டு மூடப்பட்டது.

இதுகுறித்து அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப் பேரவையின் நிறுவனா் வைர. ந. தினகரன் கூறியது: அண்ணல் காந்தியடிகள் எந்தக் கட்சியும் சாராத தேசத் தலைவா். கடந்த காலத் தோ்தல்களில் அரசியல் தலைவா்களின் சிலைகளை மட்டும் மூட வேண்டும். நேரடியாக அரசியலில் ஈடுபடாத தலைவா்களின் சிலைகளை மூடக் கூடாது என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. இந்தத் தோ்தலில் ஏன் இப்படி நடந்துள்ளது எனத் தெரியவில்லை. இதுகுறித்து, மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பி. உமா மகேஸ்வரி உரிய உத்தரவுகளைப் பிறப்பித்து காந்தியடிகள் சிலைக்கு நேரிட்டுள்ள அவலத்தைத் தீா்க்க வேண்டும் என்றாா் தினகரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.