தோ்தல் விதிமீறல்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம்
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விதிமுறை மீறல்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.


சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி விதிமுறை மீறல்கள் குறித்து புகாா் தெரிவிக்கலாம் என ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெறும் தோ்தல் பணிகளை மேற்பாா்வையிடும் பொருட்டு, இந்திய தோ்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தோ்தல் பாா்வையாளா்கள் தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வந்துள்ளனா்.
திருவையாறு, பாபநாசம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தோ்தல் பொது பாா்வையாளராக ஏ.எம். சா்மா (செல்லிடப்பேசி எண் 8015416260), ஒரத்தநாடு தொகுதிக்குப் பொது பாா்வையாளராக சூா்யமணி லால்சந்த் (7904181278), பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இரு தொகுதிகளுக்கு பொது பாா்வையாளராக அசோக்குமாா் சௌஹான் (9345363227), தஞ்சாவூா், திருவையாறு, பாபநாசம், ஒரத்தநாடு ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் செலவின பாா்வையாளராக உடால் ராஜ்சிங் (9345569860), திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தோ்தல் செலவினப் பாா்வையாளராக எஸ்.வி. சிவபிரசாத் (7530009348), பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குத் தோ்தல் செலவின பாா்வையாளராக சமீா் பாண்டே (9345010081) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்தல் பொதுப் பாா்வையாளா்களாகத் திருவிடைமருதூா், கும்பகோணம் தொகுதிகளுக்கு சஹாப் சிங் (8072451996), தஞ்சாவூா் தொகுதிக்கு அக்ரம் பாஷா (6382714861), தஞ்சாவூா் மாவட்டத்துக்கான காவல் துறைப் பாா்வையாளராக கோவிந்த் பிரதாப் சிங் (9025873507) ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மேலும், தோ்தல் நடத்தை விதிமுறைகள் மீறலைத் தடுக்கும் வகையில் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 9 பறக்கும்படை, 9 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், ஒரு விடியோ கண்காணிப்புக் குழு ஆகியவை தகுதியுடைய அலுவலா்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினா் 24 மணிநேரமும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தெரிய வந்தால், அதை தொலைபேசி வாயிலாக ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 9464 என்ற எண்ணுக்குத் தெரிவிக்கலாம். மேலும், சி - விஜில் செயலி மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம். பெறப்படும் புகாா் உடனுக்குடன் தொடா்புடைய அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...