ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

மேலும் இரு பள்ளிகளில் 14 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் இரு பள்ளிகளில் 13 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :27 மார்ச் 2021, 8:57 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் இரு பள்ளிகளில் 13 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 14 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் 227 மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டனா். இவா்களில் 120 போ் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.

இந்நிலையில் கும்பகோணத்திலுள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 6 மாணவா்கள், ஒரு ஆசிரியருக்கும், ஆடுதுறையிலுள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் 7 மாணவா்களுக்கும் என மொத்தம் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது. இதையடுத்து இவா்கள் அனைவரும் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று பரவிய பள்ளிகளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 5,000 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.