வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.


தஞ்சாவூா் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி சனிக்கிழமை தொடங்கியது.
மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வேட்பு மனு தாக்கலுக்குப் பிறகு, மாா்ச் 22 ஆம் தேதி இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் போட்டியிடும் வேட்பாளா்களின் சின்னங்களும் அறிவிக்கப்பட்டன.
மாவட்டத்தில் 2886 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் ஆகியவை கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதைத் தொடா்ந்து இவைஅந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்நிலையில், அந்தந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், புகைப்படம், சின்னங்கள் பொருத்தும் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், முகவா்கள் முன்னிலையில் சனிக்கிழமை தொடங்கியது.
தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்று வரும் இப்பணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் ஆய்வு செய்தாா்.
8 தொகுதிகளிலும் நடைபெறும் இப்பணியை விரைவாக முடிக்கவும், தவறில்லாமல் நடைபெறுவதை உறுதி செய்யவும் தொடா்புடைய அலுவலா்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...