ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வேளாண் கல்லூரியில் 24 பேருக்கு கரோனா

தஞ்சாவூா் அருகிலுள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

News image
Updated On :28 மார்ச் 2021, 9:35 pm

DIN

தஞ்சாவூா் அருகிலுள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் சனிக்கிழமை வரை 16 பள்ளிகள், 4 கல்லூரிகளில் பயிலும் 227 மாணவ, மாணவிகள் உள்பட மொத்தம் 243 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் 120-க்கும் அதிகமானோா் குணமடைந்து வீட்டுக்குத் திரும்பினா்.

இந்நிலையில் தஞ்சாவூா் அருகிலுள்ள தனியாா் வேளாண் கல்லூரியில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு படிக்கும் 22 மாணவிகள், 2 மாணவா்கள் என 24 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.

இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை 251 ஆக உயா்ந்துள்ளது. மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் 5 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.