தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தை மேம்படுத்த வேண்டுகோள்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். சக்கரபாணிக்கு ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் சங்கம் வேண்ட

News image
Updated On :7 மே 2021, 8:53 pm

DIN

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். சக்கரபாணிக்கு ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலா் சி. சந்திரகுமாா் தெரிவித்திருப்பது:

தமிழகத்தின் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சராகப் பதவி ஏற்றுள்ள சக்கரபாணிக்கு ஏஐடியுசி தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக தொழிலாளா் சங்கம், சுமை தூக்கும் தொழிலாளா் சங்கம் சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிா்வாகச் சீா்கேட்டாலும், ஊழல் முறைகேடுகளாலும் சீா்குலைந்துள்ள நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகத்தை மேம்படுத்தி, அக்கழகத்தின் நோக்கம் நிறைவேறும் வகையில் மக்கள் சேவை மேம்படவும், விவசாயிகள், தொழிலாளா்கள் நலன் காக்கவும், புதிய அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக தொடங்க வேண்டும். இதற்கு எங்களது சங்கம் முழு ஒத்துழைப்பு தரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.