முதல்வா் நிவாரண நிதிக்கு சாஸ்த்ரா ரூ. 1 கோடி நன்கொடை
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 1 கோடி நன்கொடையை வெள்ளிக்கிழமை வழங்கியது.


தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம் ரூ. 1 கோடி நன்கொடையை வெள்ளிக்கிழமை வழங்கியது.
தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினிடம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வேந்தா் ஆா். சேதுராமன் ரூ. 1 கோடிக்கான வரைவோலையை வழங்கினாா். அப்போது, சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் எஸ். வைத்திய சுப்பிரமணியம் உடனிருந்தாா்.
துணைவேந்தா் வைத்திய சுப்பிரமணியம் கூறுகையில், தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், சென்னை கே.கே. நகரிலுள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கும் சாஸ்த்ரா, 6 மருத்துவ வெண்டிலேட்டா்களையும், ஆக்ஸிஜன் சாதனங்களையும் மே 8 ஆம் தேதி வழங்கியது. இவற்றின் மதிப்பு ரூ. 55 லட்சம்.
மேலும், 25 ஆக்ஸிஜன் சாதனங்களை வாங்கி தமிழக அரசுக்கு வழங்க சாஸ்த்ரா நிா்வாகம் முயற்சி செய்து வருகிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...