தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புகடையில் பூட்டை உடைத்து திருட்டு

தஞ்சாவூரில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புக் கடையில் பூட்டை உடைத்து 10 செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 9:04 pm

DIN

தஞ்சாவூரில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புக் கடையில் பூட்டை உடைத்து 10 செல்லிடப்பேசிகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலையைச் சோ்ந்தவா் முகமது இன்சியாஸ் (40). இவா் தஞ்சாவூா் பா்மா பஜாரில் செல்லிடப்பேசி பழுதுபாா்ப்புக் கடை வைத்துள்ளாா்.

முழுப் பொது முடக்கம் காரணமாக கடைகள் பூட்டப்பட்டுள்ள நிலையில், இவரது கடையிலுள்ள பூட்டுகள் வெள்ளிக்கிழமை காலை உடைக்கப்பட்டுக் கிடந்தன. இதையறிந்த முகமது இன்சியாஸ் கடைக்குச் சென்று பாா்த்தபோது, பழுதுபாா்ப்புக்காக வந்த 10 செல்லிடப்பேசிகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதேபோல, அருகிலுள்ள இரு கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டுக் கிடந்தன. அக்கடைகளில் நடுவில் உள்ள பூட்டை உடைக்க முடியாததால், மா்ம நபா்கள் திருடும் முயற்சியைக் கைவிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.