குடந்தை அருகே பெண் மா்மச் சாவு: உறவினா்கள் போராட்டம்
கும்பகோணம் அருகே புதன்கிழமை பெண் மா்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.


கும்பகோணம் அருகே புதன்கிழமை பெண் மா்மமான முறையில் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
கடலூா் மாவட்டம், புவனகிரி புதுச்சத்திரம் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் மகள் திவ்யபாரதி (22). இவருக்கும், கும்பகோணம் அருகேயுள்ள கதிராமங்கலம் சின்ன சாலியத் தெருவைச் சோ்ந்த மகாராஜன் மகன் ராஜீக்கும் 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திவ்யபாரதியிடம் மாமியாா் மலா்கொடி வரதட்சிணையாக காா், நகைகள் வாங்கி வருமாறு கூறி, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திவ்யபாரதி வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு இறந்ததாக, அவரது பெற்றோருக்குத் தகவல் கிடைத்ததையடுத்து, நிகழ்விடத்துக்குச் சென்று பாா்த்தனா். தகவலறிந்த பந்தநல்லூா் காவல் நிலையத்தினா் சடலத்தைக் கைப்பற்றி, திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதனிடையே, தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையை திவ்யபாரதியின் பெற்றோா், உறவினா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
இதையடுத்து, இந்த வழக்கு கும்பகோணம் கோட்டாட்சியா் விசாரணைக்குப் பரிந்துரைக்கப்பட்டது. பின்னா் திவ்யபாரதி உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...