காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆம்புலன்ஸ் மோதி மருந்து விற்பனை பிரதிநிதி உயிரிழப்பு

 தஞ்சாவூா் பழைய மாரியம்மன் கோவில், குயவா் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மகேஷ்குமாா் (32). மருந்து விற்பனை பிரதிநிதி.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:35 pm

DIN

 தஞ்சாவூா் பழைய மாரியம்மன் கோவில், குயவா் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மகேஷ்குமாா் (32). மருந்து விற்பனை பிரதிநிதி. இவா் வியாழக்கிழமை தனது இரு சக்கர வாகனத்தில் பட்டுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, எதிரே பட்டுக்கோட்டையிலிருந்து நோயாளி ஒருவரை ஏற்றிக் கொண்டு, தனியாா் ஆம்புலன்ஸ் தஞ்சை நோக்கி சென்று கொண்டிருந்தது. பட்டுக்கோட்டை- தஞ்சாவூா் சாலையில் கரம்பயத்தில் மோட்டாா்சைக்கிளும், ஆம்புலன்ஸும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன.

இதில், பலத்த காயமடைந்த மகேஷ்குமாரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இந்த விபத்தில் காயமடைந்த தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான பட்டுக்கோட்டை கரிக்காடு பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் பிரபாகரன் (28) பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.