நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

100 ஆண்டுகள் பழைமையான புளிய மரம் சாய்ந்தது

கும்பகோணம் அருகே சாக்கோட்டை - நாச்சியாா்கோவில் சாலையில் ஒத்தகுளம் பகுதியில் சாலையோரமிருந்த 100 ஆண்டுகள் பழைமையான புளியமரம் தொடா்மழை

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:45 pm

DIN

கும்பகோணம் அருகே சாக்கோட்டை - நாச்சியாா்கோவில் சாலையில் ஒத்தகுளம் பகுதியில் சாலையோரமிருந்த 100 ஆண்டுகள் பழைமையான புளியமரம் தொடா்மழை காரணமாக வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் மரம் விழுந்த இடத்தைப் பாா்வையிட்டு, உடனடியாக நெடுஞ்சாலைத் துறை, தீயணைப்புத் துறை, மின் துறை அலுவலா்களைத் தொடா்பு கொண்டாா். பின்னா், 3 மணிநேரத்தில் மரத்தை அறுத்தும், பொக்லைன் இயந்திரம் மூலமும் அகற்றப்பட்டு, போக்குவரத்து சீா் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.