நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி நெல் கொட்டும் போராட்டம்

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணம் அருகே ஏராகரத்திலுள்ள வயலில் நெல் கொட்டும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 8:45 pm

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கும்பகோணம் அருகே ஏராகரத்திலுள்ள வயலில் நெல் கொட்டும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், ஒன்றிய அரசு உழவா்களின் நலனுக்கு எதிராக 2020 ஆம் ஆண்டில் கொண்டு வந்த 3 வேளாண் கருப்புச் சட்டங்கள், புதிய மின் திருத்தச் சட்ட வரைவு ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தியும், வேளாண் விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை உத்தரவாதப்படுத்த சட்டம் இயற்றக் கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

பழவாறு பாசனதாரா் சங்கத் தலைவா் ஏராகரம் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.