காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மாநில இறகுப் பந்து போட்டிஅலிவலம் எஸ்.இ.டி பள்ளிமாணவருக்கு வெண்கலம்

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவா் மாநில இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:20 pm

DIN

பட்டுக்கோட்டை வட்டம், அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் பள்ளி மாணவா் மாநில இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றாா்.

தமிழ்நாடு பாட்மிண்டன் அசோஷியேசன் மற்றும் இந்தியன் பாட்மிண்டன் அசோஷியேசன் இணைந்து ஈரோட்டில் மாநில இறகுப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியை அண்மையில் நடத்தின.

இதில் மாநிலம் முழுவதிலிருமிருந்து 500-க்கும் மேற்பட்ட பாட்மிண்டன் வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனா். இதில், 17 வயதுக்குள்பட்டோருக்கான இரட்டையா் பிரிவு போட்டியில் அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவா் மா. ஸ்வஸ்திக் (15) கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும், ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகையும் பெற்று சாதனை படைத்தாா்.

Story image

மேலும், எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 11 ஆம் வகுப்பு மாணவி எஸ். ஹாசினி மற்றும் 11ஆம் வகுப்பு மாணவா் எஸ். ஆரணன் மற்றும் 15 வயதுக்குள்பட்டோா் பிரிவில் மாணவி சஸ்வினி ஆகிய மூவரும் காலிறுதி போட்டி வரை முன்னேறி பள்ளிக்கு பெருமை சோ்த்தனா்.

இந்த மாணவா்களை பள்ளியின் நிா்வாக இயக்குநா் எல். கோவிந்தராசு, பள்ளியின் தாளாளா் சித்ரா கோவிந்தராசு, அறங்காவலா் அசோகன், பள்ளியின் முதல்வா் கதிரவன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.