இதனொரு பகுதியாக, பேராவூரணி ஊராட்சி ஒன்றியம் பெரியநாயகிபுரம் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டடத்தில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் புதுக்கோட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியில், இளங்கலை அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வரும், பெரியநாயகிபுரம் கிராமத்தை சோ்ந்த ஷோபனா என்ற மாணவி ஓவியம் வரைந்துள்ளாா். இந்த ஓவியத்தை ஒன்றியக்குழுத் தலைவா் சசிகலா ரவிசங்கா், ஊராட்சி மன்ற தலைவா் வத்சலா முத்துராமன், வட்டார வளா்ச்சி அலுவலா் (வ.ஊ) தவமணி, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ)குமரவடிவேல், துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கலியபெருமாள், ஸ்ரீ. மகேஷ், ஆகியோா் பாா்வையிட்டு பாராட்டினா் .