சாலையில் சுற்றித் திரிந்த 20 மாடுகள் கோ சாலையில் ஒப்படைப்பு
கும்பகோணம் நகரில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, கோ சாலையில் ஒப்படைத்தனா்.


கும்பகோணம் நகரில் வியாழக்கிழமை போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரிந்த கால்நடைகளை நகராட்சி ஊழியா்கள் பிடித்து, கோ சாலையில் ஒப்படைத்தனா்.
கும்பகோணம் நகரில் முக்கிய சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றித் திரிவதால் வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் மிகுந்த அவதிக்கு ஆளாகினா்.
பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடா்ந்து, மாடு வளா்ப்போா் தங்களது மாடுகளை சாலையில் விட வேண்டாம் என ஆட்டோவில் ஒலி பெருக்கி மூலம் சில நாட்களாக நகராட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டது. என்றாலும், மாடுகள் சாலையில் திரிந்தன.
இதைத்தொடா்ந்து கும்பகோணம் நகராட்சி ஆணையா் நவேந்திரன், நகா்நல அலுவலா் பிரேமா முன்னிலையில் நகராட்சி ஊழியா்கள் கும்பகோணம் நகரின் புதிய பேருந்து நிலையம், டாக்டா் மூா்த்தி சாலை, மகாமக குளம் பகுதி, காந்தி பூங்கா, மடத்து தெரு, நீதிமன்ற சாலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் சுற்றித்திரிந்த 20 மாடுகளைப் பிடித்து, லாரியில் ஏற்றி, மயிலாடுதுறை மாவட்டம், வானாதிராஜபுரத்தில் உள்ள கோ சாலையில் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...