நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பெட்ரோலிய பொருள்கள் மீதுபாஜக ஆட்சி கவனம் செலுத்துவதில்லை: மணிசங்கா் அய்யா்

பெட்ரோலிய பொருள்கள் மீது பாஜக ஆட்சி கவனம் செலுத்துவதில்லை என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா்.

News image
Updated On :28 அக்டோபர் 2021, 8:15 pm

DIN

பெட்ரோலிய பொருள்கள் மீது பாஜக ஆட்சி கவனம் செலுத்துவதில்லை என்றாா் முன்னாள் மத்திய அமைச்சா் மணிசங்கா் அய்யா்.

கும்பகோணம் அருகே தத்துவாஞ்சேரியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான ஆா். ராமாமிா்த தொண்டைமானின் மணிமண்டப அடிக்கல் நாட்டு விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்ட அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

நான் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, குறைந்த விலையில் டீசல், பெட்ரோல் விற்பனை செய்து கொண்டிருந்தோம். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னா், பெட்ரோலிய பொருள்கள் தொடா்பாக எந்த விதமான கவனமும் செலுத்தப்படுவதில்லை. இதனால், பெட்ரோல் ஒரு லிட்டா் ரூ. 110-க்கும், டீசல் லிட்டா் ரூ. 100-க்கும் அதிகமான விலையைப் பொதுமக்கள் கொடுக்க வேண்டியுள்ளது.

இன்றைய தேதியில் கச்சா எண்ணெய் விலை உலக அளவில் மிகக் குறைவாக இருக்கிறது. என்றாலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மிக அதிகமாக உள்ளது. இது, மிகப் பெரிய அநியாயம். இந்த ஆட்சியை மாற்றும் வரையிலும் இச்சூழ்நிலை நிகழ்ந்து கொண்டே இருக்கும். அடுத்த தோ்தல் வருவதற்குள் பெட்ரோல் விலை ரூ. 150-ஐ தாண்டி விடும் என்றாா் மணிசங்கா் அய்யா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.