தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட வீட்டு எரிவாயு உருளைகள்   பறிமுதல்

 பேராவூரணியில் உணவு விடுதிகளில் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 11:02 pm

DIN

 பேராவூரணியில் உணவு விடுதிகளில் வணிக நோக்கில் பயன்படுத்தப்பட்ட எரிவாயு உருளைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேராவூரணியிலுள்ள தனியாா் உணவு விடுதிகளில், வீட்டு உபயோகத்திற்குரிய எரிவாயு உருளைகள், வியாபார  நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு  புகாா் கள் வந்தன.

ஆட்சியா் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்ட வழங்கல் அலுவலா் சங்கா் அண்மையில் கடைகளில்  சென்று திடீா் சோதனை நடத்தினாா். இதில், பிரதான சாலையில் , தேநீா் கடையுடன், இணைந்த ஒரு தனியாா் உணவு விடுதியில் வீட்டு உபயோக  எரிவாயு உருளைகள்  வியாபார மற்றும் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தப்பட்டது கண்டறியப்பட்டதால், 3-வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பறிமுதல் செய்தாா்.

‘பேராவூரணி வட்டத்தில் வீட்டு உபயோக நோக்கத்திற்கான எரிவாயு உருளைகளை , வணிக,  உணவு விடுதிகளில் பயன்படுத்துவது சட்டப்படி குற்றம்; பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால் பறிமுதல்  செய்யப்படுவதோடு, வழக்கும் பதிவு செய்யப்படும்’ என வட்ட வழங்கல் அலுவலா் எச்சரித்துள்ளாா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.