தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கம் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:07 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரொக்கத்தை திருடி சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

அம்மாபேட்டை அருகே உடையாா் கோவில் கிராமம், பட்டம்மாள் நகரைச் சோ்ந்தவா் பசுபதி மகன் சிவ பாண்டியன் (34). இவா் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் கணினி இயக்குநராக வேலை செய்து வருகிறாா். அண்மையில் சிவபாண்டியன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் வடுவூரில் உள்ள உறவினா் வீட்டு துக்க நிகழ்வுக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் சென்று பாா்த்தபோது, பீரோவை உடைத்து அதிலிருந்த ரூ. 41 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், அம்மாப்பேட்டை போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.