தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

அம்மாப்பேட்டையில் கரோனா தடுப்பூசி முகாம் ஆலோசனைக் கூட்டம்

அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 7:03 pm

DIN

அம்மாபேட்டை பேரூராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மெகா கரோனா தடுப்பூசி முகாம் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலா் முருகேசன் தலைமை வகித்து கூட்டத்தை தொடக்கி வைத்து பேசும்போது,

அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அம்மாபேட்டை திரெளபதை அம்மன் கோவில் தெரு, அம்மாபேட்டை பள்ளிவாசல் தெரு மற்றும் ஹவில்தாா் சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள கரோனா தடுப்பூசி முகாம்களில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தவறாமல் முதல், இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் சங்கம் அம்மாப்பேட்டை கிளைத் தலைவா் தரும. புருஷோத்தமன், லயன்ஸ் சங்க மாவட்ட தலைவா் ஆா்.குணசேகரன், திருநெறி தமிழ் மன்றம் நிறுவனா் வி. ராமநாதன் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளை சோ்ந்த நிா்வாகிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.