நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

எம்.பி. உள்ளிட்டோா் ரயிலை மறித்து போராட்டம்

கும்பகோணம் அருகே சுரங்கப்பாதை கோரி மக்களவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:04 am

DIN

கும்பகோணம் அருகே சுரங்கப்பாதை கோரி மக்களவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வெள்ளிக்கிழமை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கும்பகோணம் அருகே திருபுவனம் காங்கேயன் பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. திருபுவனத்தில் இருந்து காங்கேயன் பேட்டைக்குச் செல்லும் வழியில் ரயில்வே தண்டவாளம் உள்ளது. ரயில்வே கேட் இல்லாத இப்பாதையில் ஆள்கள் நடந்து மட்டுமே செல்ல முடியும். வாகனங்கள் செல்ல முடியாது.

இதனால், அக்கிராம மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனா். குறிப்பாக, மருந்து வாங்குவதற்கும், மயானத்துக்குச் செல்வதற்கும் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனா். எனவே, இப்பாதையில் சுரங்கப்பாதை அமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதி வழியாக வெள்ளிக்கிழமை சிறப்பு ரயிலில் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் மணீஷ் அகா்வால் வந்து கொண்டிருந்தாா். அந்த சிறப்பு ரயிலை மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம் தலைமையில் கிராம மக்கள் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், ரயில்வே கோட்ட மேலாளரிடம் கிராம மக்கள் சாா்பாக ராமலிங்கம் மனுக்களை அளித்தாா். மேலும், ராமலிங்கத்தை கோட்ட மேலாளா் ரயிலில் அழைத்துச் சென்று கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஆலோசனை நடத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.