2,304 புதுச்சேரி மதுபாட்டில்கள் பறிமுதல்: இளைஞா் கைது
கும்பகோணம் அருகே புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2,304 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.


கும்பகோணம் அருகே புதுச்சேரி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 2,304 மதுபான பாட்டில்களை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.
கும்பகோணம் அருகே சோழபுரம் செங்கனூா் பகுதியில் புதுச்சேரியிலிருந்து மதுபான பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்கப்படுவதாகக் காவல் துறைக்குப் புகாா்கள் வந்தன. இதன் பேரில் திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளா் முத்துக்குமாா், சோழபுரம் காவல் நிலையத்தினா் செங்கனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதில், காரில் புதுச்சேரியிலிருந்து 2,304 குவாா்ட்டா் பிராந்தி பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்து, செங்கனூரைச் சோ்ந்த ஏ. சண்முகத்தை (26) கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...