ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தீயணைப்புத் துறையினா் துண்டுப் பிரசுரம் வழங்கல்

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி, பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2022, 7:03 pm

DIN

தீயணைப்புத் தொண்டு வார விழாவையொட்டி, பேராவூரணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வியாழக்கிழமை வழங்கினா்.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில், தீயணைப்பு தொண்டு வார விழா ஏப்ரல் 14 முதல் 20-ஆம் தேதி வரை ஒரு வார காலம் நடைபெறுகிறது. 

இதையொட்டி, பேராவூரணி தீயணைப்பு நிலைய அலுவலா் ஐ. செந்தூா் பாண்டியன் தலைமையில் , வீரா்கள் ராமச்சந்திரன், ரஜினி, சரவணமூா்த்தி, சுா்ஜித் ஆகியோா் வியாழக்கிழமை விழிப்புணா்வுப் பணியில் ஈடுபட்டனா்.

பழைய பேருந்து நிலையம், காந்தி பூங்கா, ரயில் நிலையம் , பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனத்துடன் சென்று கடைவீதி வியாபாரிகள், பொதுமக்கள், பயணிகளுக்கு தீத்தடுப்பு, தீ பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு முறைகள் குறித்து ஒலிபெருக்கி  மூலம் அறிவிப்பு செய்து,  துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.