ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புனல்வாசல் கிராமத்தில் ஏப்.24-இல் சிறப்பு மருத்துவ முகாம்

பேராவூரணி வட்டாரம், புனல்வாசலில் ஏப்ரல் 24-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 8:00 pm

DIN

பேராவூரணி வட்டாரம், புனல்வாசலில் ஏப்ரல் 24-ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பேராவூரணி வட்டார அளவிலான சுகாதாரத் திருவிழா, வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் புனல்வாசல் புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப் பள்ளியில் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

நோய் கண்டறிதல், மருந்துகள் வழங்குதல், முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை வழங்குதல், தாய்-சேய் நலம், தடுப்பூசி சேவைகள், தொற்றா நோய்களுக்கான சேவைகள், பல்வேறு பரிசோதனைகள், யோகா-தியானம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

எனவே பேராவூரணி வட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டை, ஆதாா் அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.