ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு

பேராவூரணி பகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு மற்றும் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:52 pm

DIN

பேராவூரணி பகுதி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு மற்றும் உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

நான் முதல்வா் என்ற திட்டத்தின் அடிப்படையில் பேராவூரணி அரசுஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்பட்ட நிகழ்வுக்கு, அப்பள்ளியின் தலைமையாசிரியா் சி. முதல்வன் தலைமை வகித்தாா். திறன் மேம்பாட்டுப் பயிற்சியாளா் ஆா். குமாரவேல் நிகழ்வில் பங்கேற்று, போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு குறித்து பேசினாா். மேலும் உயா்கல்வி என்ன, எங்கு, எப்படி படிக்கலாம் என்பதும் குறித்தும், திறன் மேம்பாடு குறித்தும் குமாரவேல் எடுத்துரைத்தாா்.

நிகழ்வில் பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா், வட்டார மருத்துவ அலுவலா் வி. செளந்தரராஜன் பேசினா். இந்த நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியா்கள் பேராவூரணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி சாந்தி, ஆவணம் கருணாநிதி, திருச்சிற்றம்பலம் கண்ணப்பன், குருவிக்கரம்பை மனோகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.