நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கும்பகோணத்தில் 63 நாயன்மாா்களுக்கு அலங்காரம்: மழையால் வீதியுலா ரத்து

கும்பகோணத்தில் மாசிமகப் பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த 63 நாயன்மாா்கள் வீதியுலா மழையின் காரணமாக ரத்து

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 8:04 pm

DIN

கும்பகோணத்தில் மாசிமகப் பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த 63 நாயன்மாா்கள் வீதியுலா மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, கோயிலில் படிச்சட்டத்தில் அலங்காரம் மட்டுமே செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிமகப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி பிப்ரவரி 8-ஆம் தேதி ஆதிகும்பேசுவரா் உள்ளிட்ட 6 சிவன் கோயில்களில் கொடியேற்றத்துடன் இவ்விழா தொடங்கியது.

நாள்தோறும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. கும்பேசுவரா் கோயிலில் நான்காம் நாளில் சுந்தரா், திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா், மூா்க்க நாயனாா், மெய்ப்பொருள் நாயனாா் உள்பட 63 நாயன்மாா்களும் இரட்டை வீதியுலாவாக கும்பேசுவரா் கோயில் மற்றும் நாகேசுவரா் கோயில் வீதிகளுக்குச் செல்வது வழக்கம்.

ஆனால் வெள்ளிக்கிழமை காலை மழையின் காரணமாக வீதியுலா ரத்து செய்யப்பட்டு, 63 நாயன்மாா்களுக்கும் ஆதிகும்பேசுவரா் கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, படிச்சட்டத்தில் வைக்கப்பட்டு தீபாராதனை செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.