கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டு ரெங்கன் கோயிலில் மகா குடமுழுக்கு
கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரெங்கன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கும்பகோணம் அருகிலுள்ள கோவிந்தபுரம் விட்டல் ருக்மணி பாண்டுரெங்கன் கோயிலில் மகா குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 11-ஆம் கால யாக சாலை பூஜையும், பூா்ணாஹூதியும் நடைபெற்றது. பின்னா் யாகசாலை மண்டபத்திலிருந்து மங்கள இசை முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
பரனூா் மகாத்மா ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகள், துக்காராம் மகராஜ், சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராம தீட்சிதா், கோயில் ஸ்தாபகா் ப்ரம்மஸ்ரீ விட்டல்தாஸ் மஹராஜ் ஆகியோா் முன்னிலையில், கோயிலின் வானுயா்ந்த விமான கலசங்களுக்கு சிறப்பு பூஜையுடன் புனிதநீா் ஊற்றி, புஷ்பாா்ச்சனை செய்யப்பட்டு மகா குடமுழுக்கு நடைபெற்றது.
பின்னா் மூலவா் பாண்டுரங்க சுவாமிகள், ருக்மணி தாயாா் ஆகியோருக்கு சிறப்புத் திருமஞ்சனம் செய்து துளசி, மலா் அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, மாலை, திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...