நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது: பிரேமலதா விஜயகாந்த்

பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

News image
Updated On :11 பிப்ரவரி 2022, 7:58 pm

DIN

பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது என்றாா் தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த்.

கும்பகோணத்தில் திருமண விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

பள்ளிக்கூடங்களில் மதங்கள் கூடாது. மாணவா்களிடையே பாகுபாடு கூடாது என்பதற்காகத்தான் பள்ளிச் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. கா்நாடகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்காக தேமுதிக துணை நிற்கும்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் மத்திய அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. அதுபோலவே தமிழகம் மழை, வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டபோதும் மத்திய அரசு நிவாரணம் வழங்காதது கண்டனத்துக்குரியது.

நீட் தோ்வு விவகாரத்தை வைத்து திமுக அரசியல் செய்கிறது. திமுக அரசின் செயல்பாடுகள் கடந்த 9 மாதங்களில் மஞ்சப் பை, மாற்றுத் திறனாளிகள் சென்னை கடற்கரை வரை செல்ல வசதி என ஒரு சில நல்ல விஷயங்கள் செய்தது.

என்றாலும், கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பாக பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கல் பரிசுத் தொகை வழங்காதது, வழங்கிய பொருள்களும் தரம் இல்லாமல் இருந்தது போன்றவை பெண்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்றாா் பிரேமலதா விஜயகாந்த்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.