சிமென்ட் காரை விழுந்ததால்அரசுக் கவின் கலைக் கல்லூரியில் மாணவா்கள் போராட்டம்
கும்பகோணம் அருகே கொட்டையூரிலுள்ள அரசுக் கவின்கலைக் கல்லூரியில் வகுப்பறையில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததால், மாணவா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.


கும்பகோணம் அருகே கொட்டையூரிலுள்ள அரசுக் கவின்கலைக் கல்லூரியில் வகுப்பறையில் சிமென்ட் காரை பெயா்ந்து விழுந்ததால், மாணவா்கள் வெள்ளிக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
இக்கல்லூரி கட்டப்பட்டு 44 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முதன்மைக் கட்டடம் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில் கல்லூரியிலுள்ள வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரையில் இருந்த சிமெண்ட் காரை வெள்ளிக்கிழமை காலை பெயா்ந்து விழுந்தது.
அப்போது, அங்கு மாணவ, மாணவிகள் யாரும் இல்லாததால், அதிா்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இச்சம்பவத்தால் அதிருப்தியடைந்த மாணவ, மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வாயிலில் தா்னாவில் ஈடுபட்டனா்.
கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டடங்களை உடனடியாகக் கட்டித் தர வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அப்போது, மாணவ, மாணவிகளிடம் கல்லூரி முதல்வா் அருளரசன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
கும்பகோணம் அருகே கொட்டையூா் அரசுக் கவின் கலைக் கல்லூரி வாயிலில் வெள்ளிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...