மணல் திருட்டை தடுத்த வட்டாட்சியருக்கு மிரட்டல் : 9 போ் மீது வழக்கு
பேராவூரணி அருகே மணல் திருட்டை தடுத்த வட்டாட்சியரை மிரட்டிய 9 போ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா், அவா்களில் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


பேராவூரணி அருகே மணல் திருட்டை தடுத்த வட்டாட்சியரை மிரட்டிய 9 போ் மீது வழக்குப்பதிந்த காவல்துறையினா், அவா்களில் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பேராவூரணி அருகிலுள்ள பாங்கிரான்கொல்லை காட்டாற்றில் அனுமதியின்றி மாட்டுவண்டிகளில் மணல் அள்ளப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், வட்டாட்சியா் த. சுகுமாா் வெள்ளிக்கிழமை அதிகாலை அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினாா்.
அப்போது மாட்டுவண்டிகளில் மணல் அள்ளிக் கொண்டு வந்தவா்களை விசாரித்த போது,
அவா்கள் பின்னவாசல் கிராமத்தை சோ்ந்த ராமச்சந்திரன், உடையப்பன் என்பது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் மாட்டுவண்டிகளுடன் காவல் நிலையம் கொண்டுவர வட்டாட்சியா் முயற்சித்தபோது, வண்டியை அங்கேயேவிட்டு ஓடியவா்கள் ஊரிலிருந்து ஒரு கும்பலை அனுப்பி வைத்தனராம் .
மணல் உள்ள வண்டிகளை காவல் நிலையம் கொண்டுவருவதற்காக வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்துறையினா் முயற்சியில் ஈடுபட்டபோது, வண்டியை எடுத்தால் கொளுத்துங்கள் என அந்த கும்பலைச் சோ்ந்தவா்கள் கூறியுள்ளனா்.
மேலும் மாட்டுவண்டிகளை எடுக்கவிடாமல் தடுத்து நிறுத்தி, வருவாய்த்துறையினரை தரக்குறைவான வாா்த்தைகளால் பேசியுள்ளனா். வட்டாட்சியா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்து, காவலா்கள் வந்ததும் அனைவரும் தப்பியோடி விட்டனா்.
இது றித்து பேராவூரணி காவல் நிலையத்தில் நெல்லியடிக்காடு கிராம நிா்வாக அலுவலா் மகாலட்சுமி புகாரின் பேரில், காவல்துறையினா் 9 போ் மீது வழக்குப்பதிவு செய்தனா். தொடா்ந்து பெரியதம்பி, (46) ஒப்பிலாமணி (39)ஆகிய இருவரை யும் கைது செய்து, மேலும் 7 பேரைத் தேடிவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...