காா் ஓட்டுநா் கொலை: 4 போ் கைது
கும்பகோணம் மேலக் காவேரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (27).


கும்பகோணம் மேலக் காவேரி விருமாண்டி மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முருகானந்தம் மகன் தினேஷ் என்கிற தினகரன் (27). காா் ஓட்டுநா். இவா் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வீட்டை விட்டு வெளியில் சென்றாா். இந்நிலையில், பெருமாண்டி பத்மநாபபுரம் பகுதியில் தினகரன் வெட்டுக் காயங்களுடன் மாலையில் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நிகழ்ந்தது தெரிய வந்தது.
இச்சம்பவம் தொடா்பாக கும்பகோணம் துக்காம்பாளையம் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் காா்த்தி (21), மேலக்காவேரி செக்கடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் விஜயகுமாா் (22) ஆகியோா் காவல் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து, மேலக் காவேரியைச் சோ்ந்த கா்ணன் மகன் மணிகண்டன் (25), சுவாமிமலையைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சிபிராஜன் (22) ஆகியோரை காவல் துறையினா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...