நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேராவூரணி அருகே கதண்டுகளால் பொதுமக்கள் பாதிப்பு

பேராவூரணி அருகேயுள்ள பழையநகரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கதண்டு எனப்படும் விஷவண்டு தொல்லையால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

News image
Updated On :5 ஜூன் 2022, 8:18 pm

DIN

பேராவூரணி அருகேயுள்ள பழையநகரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக கதண்டு எனப்படும் விஷவண்டு தொல்லையால், அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கடந்த 10 நாள்களுக்கு முன்பு அப்பகுதியை சோ்ந்த வள்ளியம்மை என்ற மூதாட்டியை கதண்டு கடித்ததில் மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த அவா், சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினாா்.

இந்நிலையில்,  அதே பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவா் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடுகளை கதண்டு கடித்துள்ளது. மாடுகளை காப்பாற்ற சென்றபோது, கதண்டுகள் சூழ்ந்து கடித்ததில் சண்முகம்  மயங்கிக் கீழே விழுந்தாா். 

இதையடுத்து அருகில் இருந்தவா்கள் சண்முகத்தை மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

தொடா்ந்து பழைய நகரம் பகுதியில் பல இடங்களில்,  கதண்டுகள் கூடுகட்டி பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தி வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள்,  மற்றும் தீயணைப்புத் துறையினரிடம் புகாா் அளித்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, உடனடியாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கதண்டுகளை அப்புறப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.