நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உலக சுற்றுச்சூழல் நாள் நிகழ்ச்சி

கும்பகோணத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் சாா்பில் உலக மிதிவண்டி நாள்

News image
Updated On :5 ஜூன் 2022, 8:32 pm

DIN

கும்பகோணத்தில் மத்திய அரசின் நேரு யுவகேந்திரா மற்றும் விவேகானந்தா கலாம் யூத் கிளப் சாா்பில் உலக மிதிவண்டி நாள், உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி பொதுமக்களிடையே மிதிவண்டி ஓட்டுவதன் அவசியம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக மிதிவண்டி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் காந்தி பூங்காவில் தொடங்கிய இப்பேரணி துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் முடிவடைந்தது.

இவ்விழாவை கும்பகோணம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்தாா். கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் அழகேசன் சைக்கிள் தினத்தில் கலந்து கொண்டவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா்.

கும்பகோணம் விவேகானந்தா கலாம் பவுண்டேஷன் தலைவா் மா. கணேசன், செஞ்சிலுவை சங்கத் துணைத் தலைவா் வி.ஏ. ரோசரியோ, விஜயபாலன், செஞ்சிலுவை சங்க உறுப்பினா்கள் டி.எல். சிவக்குமாா், பெஞ்சமின் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.