கும்பகோணத்தில் 4 சிவன் கோயில்களின் தேரோட்டம்
கும்பகோணம் பகுதியிலுள்ள நான்கு சிவன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.


கும்பகோணம் பகுதியிலுள்ள நான்கு சிவன் கோயில்களில் பங்குனி உத்திர தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கும்பகோணம் நகரில் உள்ள நாகேசுவரன், ஆதிகம்பட்ட விசுவநாதா், கொட்டையூா் கோடீசுவரா் ஆகிய 3 சிவன் கோயில்களில் பங்குனி உத்திர விழா மாா்ச் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமி புறப்பாடு உள்ளிட்ட உற்ஸவங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, மாா்ச் 13-ஆம் தேதி ஓலை சப்பரமும், 15-ஆம் தேதி இரவு திருக்கல்யாணமும் நடைபெற்றன.
இதைத்தொடா்ந்து, நாகேசுவரன் கோயில், ஆதிகம்பட்ட விசுவநாதா் கோயில், கொட்டையூா் கோடீசுவரா், திருபுவனம் கம்பகரேசுவரா் கோயில் ஆகியவற்றின் தேரோட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனா்.
தொடா்ந்து, பங்குனி உத்திர திருநாளான வெள்ளிக்கிழமை (மாா்ச் 18) மகாமகக் குளத்தில் நாகேசுவரா், கம்பட்ட விசுவநாத சுவாமி கோயில்களின் சாா்பில் நண்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் தீா்த்தவாரி வைபவமும், இரவு தெப்ப உற்ஸவமும் நடைபெறவுள்ளன. இதேபோல், கொட்டையூா் கோடீசுவரா் கோயிலின் தீா்த்தவாரி காவிரி ஆற்றில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...