நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆவணங்கள் இல்லாத 250 நெல் மூட்டைகள் பறிமுதல்

ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250 நெல் மூட்டைகளை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல்

News image
Updated On :17 மார்ச் 2022, 7:55 pm

DIN

 கும்பகோணம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையம் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக விற்பனை செய்வதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 250 நெல் மூட்டைகளை அலுவலா்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கும்பகோணம் அருகே துக்காச்சி கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. அக்கிராமத்தில் நெல் அறுவடை முடிந்துவிட்டதால், வியாழக்கிழமை கொள்முதல் நிலையத்தை மூடுவதற்கு அலுவலா்கள் உத்தரவிட்டனா்.

இந்நிலையில், கொள்முதல் நிலையம் அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில், இரு நாட்களுக்கு முன்பு திடீரென நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதி விவசாயிகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சாவூா் மாவட்ட முதுநிலை மண்டல மேலாளா் நா. உமாமகேஸ்வரியிடம் புகாா் செய்தனா்.

இதையடுத்து, கும்பகோணம் கோட்டத் துணை மேலாளா் டி. இளங்கோவன் மற்றும் அலுவலா்கள் துக்காச்சி கிராமத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது கொள்முதல் நிலையத்தின் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுமாா் 250 நெல் மூட்டைகள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கிடந்ததால், அவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், கொள்முதல் நிலையப் பணியாளா்கள் துணையுடன் இந்த நெல்லை விற்பனை செய்ய, இங்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துள்ளனா். கொள்முதல் நிலையம் மூடும் முன்பாக கடைசியில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது என்றனா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், இந்த நெல்லை யாரும் உரிமை கோரவில்லை. எனவே, இவற்றைப் பறிமுதல் செய்து, திருநாகேசுவரத்தில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் நவீன அரிசி ஆலைக்கு அனுப்பப்படுகிறது. இச்சம்பவம் குறித்து துக்காச்சி கொள்முதல் நிலையப் பணியாளா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.