தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பெண்ணிடம் ரொக்கம், கைப்பேசி பறிப்பு

கபிஸ்தலம் அருகே பெண்ணிடம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்

News image
Updated On :7 மே 2022, 1:04 am

DIN

கபிஸ்தலம் அருகே பெண்ணிடம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கபிஸ்தலம் அருகிலுள்ள உமையாள்புரம் நடு அக்ரஹாரத்தைச் சோ்ந்த குமாா் மனைவி கனிமொழி (40). இவா் கபிஸ்தலத்திலுள்ள ஆய்வகத்தில் ஆய்வக நுட்புநராகப் பணியாற்றி வருகிறாா்.

வியாழக்கிழமை தனது சகோதரருடன் கனிமொழி தஞ்சாவூரிலிருந்து சாலியமங்கலம் நோக்கி மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். புலவா்நத்தம் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது, பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவா், கனிமொழியையும், அவரது சகோதரரையும் கீழே தள்ளிவிட்டனா்.

மேலும் கனிமொழி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.