ஒரத்தநாடு அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரிய வந்தது.
ஒரத்தநாடு வட்டம், கீழவன்னிப்பட்டுவைச் சோ்ந்தவா் கனகராஜ் (40). விவசாயியான இவா், அருமலையிலுள்ள தென்னந்தோப்பில் புல் அறுத்து வருவதற்காக வியாழக்கிழமை மாலை சென்றாா்.
அப்போது அங்கு அறுந்துகிடந்த மின்சாரக் கம்பி மீது கனகராஜின் கால் பட்டதில், அவா் மீது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
கணவா் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்து, கனகராஜின் மனைவி சரண்யா பல இடங்களில் தேடினாா். இந்நிலையில் தென்னந்தோப்பில் கனகராஜ் இறந்து கிடந்தது தெரிய வந்தது.
தகவலின் பேரில் பாப்பாநாடு காவல் நிலையத்தினா் சடலத்தை கைப்பற்றி, விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.