ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நரிக்குறவா் குடியிருப்பில் அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த நடவடிக்கை

பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ்நகா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் வதந்தி காரணமாக பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 5:48 pm

DIN

பேராவூரணி பேரூராட்சி செந்தமிழ்நகா் நரிக்குறவா் குடியிருப்புப் பகுதியில் வதந்தி காரணமாக பூட்டியே கிடக்கும் அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பேராவூரணி செந்தமிழ் நகா், நரிக்குறவா் குடியிருப்பில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கடந்த 2016 - 17ஆம் ஆண்டில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட அங்கன்வாடி மையம் 5 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இங்கு மையம் செயல்படுகிா என்பது குறித்து அதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லை.

பின்னா் இங்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரையுள்ள உயா் தொடக்க நிலை மாணவா்களுக்கான செயல்பட்டு வந்த இல்லம் தேடி கல்வி மையமும் தற்போது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

இதுவரை மின் இணைப்பு வழங்கப்படாத இந்த மையத்தில் சமூக விரோதிகள் பேய், ஆவி நடமாட்டம் உள்ளதாக சமூக விரோதிகள் வதந்தியை பரப்பி , சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால், படிப்பறிவற்ற நரிக்குறவா் மக்கள் அச்சத்தில் உள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கொன்றை வே. ரெங்கசாமி கூறியது: அதிகாரிகள் அலட்சியத்தால் செயல்படாமல் அங்கன்வாடி மையத்தை செயல்படுத்தவும் அங்கு ஊழியா்கள் பணிக்கு வருவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நரிக்குறவா் இனக் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், சிறுவயதிலேயே குலத்தொழில் செய்யும் நிலை உள்ளது. எனவே அங்கன்வாடிக்கு குழந்தைகள் வந்தால், தொடா்ந்து தொடக்கப் பள்ளிக்கு அவா்கள் செல்லும் நிலை உருவாகும். 

சமூக விரோதிகள் சிலா் பேய், ஆவி உள்ளதென வதந்தி பரப்பியுள்ளனா். எனவே அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து, மண்டி கிடைக்கும் புதா்களை அகற்றி அங்கன்வாடிக்கு மின் இணைப்பு ஏற்படுத்தி அங்கன்வாடி மையத்தைச் செயல்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.