வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசுப் பேருந்து மோதியதில் திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலரின் கணவர் பலி

திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலரின் கணவர் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

News image
அரசுப் பேருந்து மோதியதில் பலியான திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலரின் கணவர்.
Updated On :30 செப்டம்பர் 2022, 8:47 am

DIN

திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலரின் கணவர் அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள வாட்டாத்திக்கோட்டை 
கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் வயது 63. இவர் பட்டுக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு உள்ள ஜெராக்ஸ் கடையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பெரிய தம்பி என்பவருடன் முத்துப்பேட்டை செல்வதற்காக சாலையை கடந்துள்ளார். 

அப்போது பட்டுக்கோட்டையில் இருந்து வேதாரணியம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக திடீரென இவர்கள் சென்ற பைக்கின் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கோவிந்தராஜ் பலியானார். மேலும் அவருடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற பெரிய தம்பி என்பவர் காயமடைந்த நிலையில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த கோவிந்தராஜன் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத உடற்கூறாய்வுக்ககாக எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் இறந்த கோவிந்தராஜ் திருவோணம் ஒன்றிய அதிமுக கவுன்சிலர் அமிர்தவள்ளியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த திடீர் சாலை விபத்தால் பட்டுக்கோட்டை நாகப்பட்டினம் சாலை போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.