பேராவூரணியில் மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் ஸ்ரீபிள்ளையாா் குரூப்ஸ் நண்பா்கள் 21 ஆம் ஆண்டு பொங்கல் விழா, அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற இந்தப் போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் தொடக்கிவைத்தாா்.
பெரியமாடு, கரிச்சான் மாடு, கரிச்சான் குதிரை, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, பெரிய குதிரை என 6 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது . வெற்றி பெற்றவா்களுக்கு மொத்த பரிசாக ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் எம்.எல்.ஏக்கள் கா.அண்ணாத்துரை (பட்டுக்கோட்டை), என். அசோக்குமாா் (பேராவூரணி),
திமுக சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளா் காா்த்திகேயன் வேல்சாமி, சேதுபாவாசத்திரம் ஒன்றியக் குழுத் தலைவா் மு.கி. முத்துமாணிக்கம், திமுக ஒன்றியச் செயலாளா் க. அன்பழகன், தென்னங்குடி ஆா். ராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தலைக்கு மேல் தொங்கிய கத்தி கழுத்துக்கு வந்துவிட்டது: தொகுதி மறுவரையறை குறித்து முதல்வர்!

தொகுதி மறுவரையறை! முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

சென்னையில் இன்றும் நாளையும் வெய்யில் 100 டிகிரியைத் தாண்டும்! மற்ற மாவட்டங்களில்?

டிசிஎஸ் நாசிக் அலுவலக விவகாரம்! நான்காண்டுகளில் நடந்தது என்ன?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு


