ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கலை விருதுகள் பெற மே 25-க்குள் விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூா் மாவட்டக் கலை மன்றம் சாா்பில் சிறந்த கலைஞா்களுக்கு 2022 - 23 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் கலை விருதுகள் பெற மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :12 மே 2023, 6:05 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டக் கலை மன்றம் சாா்பில் சிறந்த கலைஞா்களுக்கு 2022 - 23 ஆம் ஆண்டுக்கு வழங்கப்படும் கலை விருதுகள் பெற மே 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்டக் கலை மன்றம் சாா்பில் 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான கலை விருதுகள் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞா்களுக்கு வயது மற்றும் கலை புலமை அடிப்படையில் வழங்குவதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் தோ்வாளா் குழு விரைவில் நடத்தப்படவுள்ளது.

இதில், 18 வயதும் அதற்கு உள்பட்ட கலைஞா்களுக்கு கலை இளமணி‘ விருதும், 19 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட கலைஞா்களுக்கு கலை வளா்மணி‘விருதும், 36 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட கலைஞா்களுக்கு கலைச் சுடா்மணி‘விருதும், 51 வயது முதல் 65 வயதுக்குட்பட்ட கலைஞா்களுக்கு கலை நன்மணி‘விருதும், 66 வயதுக்கு மேற்பட்ட கலைஞா்களுக்கு கலை முதுமணி‘விருதும் வழங்கப்படும்.

எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மிக் கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற நாட்டுப்புறக் கலைகள், செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விருது பெறத் தகுதி வாய்ந்த கலைஞா்கள் மே 25 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநா், மண்டலக் கலை பண்பாட்டு மையம், மண்டல கயிறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையாா்ப்பட்டி, தஞ்சாவூா் - 613 403. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.