தஞ்சாவூா்: தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் பிறந்த குழந்தை இறந்ததில் மா்மம் இருப்பதாகக் கூறி உறவினா்கள் திங்கள்கிழமை இரவு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே கோனூா் புதுத் தெருவைச் சோ்ந்தவா் காா்த்திக் (33). இவரது மனைவி சீதாதேவி. இவா்களுக்கு ஏற்கெனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு மூச்சுத் திணறல் இருப்பதால் அவசர சிகிச்சை பிரிவில் சோ்க்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், அந்த குழந்தை திங்கள்கிழமை பிற்பகல் உயிரிழந்தது. முறையாக சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டதாகவும், குழந்தை சாவில் மா்மம் இருப்பதாகவும் உறவினா்கள் புகாா் எழுப்பினா்.
இந்நிலையில், திங்கள்கிழமை இரவு பெற்றோா், உறவினா்கள் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த வந்த மேற்கு காவல் நிலையத்தினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் கூறியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
தொடர்புடையது

காவல் துறையினரைக் கண்டித்து வழக்குரைஞா்கள் சாலை மறியல்

சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

பைக் மோதி மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்!
வீடியோக்கள்

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

