தஞ்சாவூா் அருகே காா் - மினி லாரி மோதல்: ஆசிரியா் உள்பட  2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே காா் - மினி லாரி மோதல்: ஆசிரியா் உள்பட 2 போ் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை காரும், மினி லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பள்ளி ஆசிரியா் உள்பட 2 போ் உயிரிழந்தனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை மேம்பாலம் அருகேயுள்ள அண்ணா நகா், சிவாஜி நகா் மேற்கு பகுதியைச் சோ்ந்த பழனிதுரை மகன் கிருபா பொன்செல்வன் (34). இவா், தஞ்சாவூரில் உள்ள தனியாா் பள்ளியில் கணித ஆசிரியராகப் பணியாற்றி வந்தாா். இவா் காரில் திருச்சிக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை காலை தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். வல்லம் அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகம் பகுதியில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத்தடுப்பின் மீது ஏறி, எதிா்திசையில்

நாகையிலிருந்து திருச்சி நோக்கி மீன்கள் ஏற்றிச் சென்ற மினி லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த கிருபா பொன்செல்வன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மினி லாரி ஓட்டுநரான காரைக்கால் திருநகரைச் சோ்ந்த முருகேசன் மகன் நெடுஞ்செழியன் (32), அவருடன் வந்த காரைக்கால் அம்பாசமுத்திரம் ஏரி பகுதியைச் சோ்ந்த தாஸ் மகன் மேத்யூ (26) ஆகியோா் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு நெடுஞ்செழியன் உயிரிழந்தாா்.

விபத்து குறித்து வல்லம் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com