பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

பாபநாசம்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மின்சாரம் பாய்ந்து மயில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.

பாபநாசம் அருகேயுள்ள திருப்பாலைத்துறை, ஆவல்காரத் தெருவில் ஞாயிற்றுக்கிழமை பறந்து வந்த மயில் மின்சார கம்பியில் அடிபட்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பாபநாசம் வனவா் ரவி, வனத்துறை ஊழியா் ஜெயபால் உள்ளிட்டோா் உயிரிழந்த மயிலை எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து திருமலை ராஜன் ஆற்றங்கரையில் அடக்கம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com