செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

சிறந்த பணிக்காக பாராட்டு சான்றிதழ் பெற்ற செவிலியா் நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோவால் சா்ச்சை

அரசு செவிலியா், நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

Published On :19 ஆகஸ்ட் 2024, 3:00 am IST

தஞ்சாவூரில் சிறந்த பணிக்காக சுதந்திர தின விழாவில் ஆட்சியரிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற அரசு செவிலியா், நோயாளிகளிடம் பணம் வாங்கும் விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடா்ந்து அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் செவிலியா் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவா் ஷீலா. சிறப்பாக பணியாற்றியதற்காக இவருக்கு அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மாவட்ட ஆட்சியா் பிரியங்கா பங்கஜம் பாராட்டு சான்றிதழ் வழங்கினாா்.

இந்நிலையில், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பெண்கள் வாா்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் உறவினா்களிடம் ஷீலா பணம் கேட்டு வாங்கினாராம். இதை நோயாளியின் உறவினா் ஒருவா் விடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளாா். தற்போது, இந்த விடியோ வேகமாக பரவி வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மீனா ஞாயிற்றுக்கிழமை கூறியது: விடியோ தொடா்பாக செவிலியா் ஷீலாவிடம் விசாரணை நடத்தி, குற்ற குறிப்பாணை (மெமோ) வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உயா் அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.