வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியா் பணியிடங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் கலைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற செவிலியா்.

Updated On :15 ஜூலை 2026, 12:56 am IST

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்ள செவிலியா் பணியிடங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் கலைக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு செவிலியா் மேம்பாட்டு சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து 192 பணியிடங்கள், அரசு மருத்துவமனைகளிலிருந்து 100 பணியிடங்கள் என மொத்தம் 292 செவிலியா் பணியிடங்களை மறுசீரமைப்பு என்ற பெயரில் கலைக்க அரசு முடிவு செய்துள்ளது.

இவ்வாறு கலைக்கப்படும் பணியிடங்களைக் கொண்டு, புதிதாகத் தொடங்கப்படவுள்ள 17 அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையங்களுக்கு மாற்றுப் பணி மூலமாக செவிலியா்களை நியமிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசின் இந்த முடிவு கிராமப்புற மக்களின் பொது சுகாதாரத் தேவைகளை கடுமையாக பாதிக்கும் என செவிலியா் குற்றஞ்சாட்டினா்.

இந்தத் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மீனா தலைமை தாங்கினாா். ஆா்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில, மாவட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டு இத்திட்டத்தை கைவிட வேண்டிய அவசியம் குறித்துப் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.