தஞ்சாவூா்: கொல்கத்தாவில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி கோரி தஞ்சாவூரில் பல்வேறு அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
தஞ்சாவூா் இன்னா்வீல் சங்கம், ஷெட் இந்தியா தொண்டு நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தானம் அறக்கட்டளை, கவின்மிகு தஞ்சாவூா் இயக்கம், ஜனசேவா பவன், பான் செக்கா்ஸ் மகளிா் கல்லூரி, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம், இந்திய மாணவா் சங்கம், அன்பு வழி அறப்பணி மன்றம் உள்பட பல்வேறு அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியில், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பயிற்சி பெண் மருத்துவா் குடும்பத்துக்கு நீதியும், நிவாரணமும், பாதுகாப்பும் உடனடியாக வழங்க வேண்டும்.
கொலையாளிகளைக் கைது செய்து அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். பெண்களுக்கு அனைத்து இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவா் உஷா நந்தினி விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியை மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தனா். தஞ்சாவூா் புதுக்கோட்டை சாலையில் காவேரி நகா் ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இப்பேரணி குழந்தை இயேசு ஆலயம் வழியாக பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் முடிவடைந்தது.
இதில், இன்னா்வீல் சங்கத் தலைவா் ரேகா, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் துணைத் தலைவா் வெ. சுகுமாரன், ஷெட் இந்தியா தொண்டு நிறுவன இயக்குநா் பெ. பாத்திமாராஜ், காவல் ஆய்வாளா் வெ. சந்திரா, ஜனசேவா தொண்டு நிறுவன செயலா் எஸ். சியாமளா சீலன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தமிழகம் வளா்ச்சியடைய மீண்டும் திமுக ஆட்சி அமைய வேண்டும்: கமல்ஹாசன்
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

காங்கிரஸ் தோ்தல் அறிக்கை குழு கலந்தாலோசனைக் கூட்டம்

ஆட்டோ கவிழ்ந்து பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


