ராஜகிரி ஸ்ரீ கரைமேல் அழகா் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகம்


தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், ராஜகிரியில் அமைந்துள்ள ஸ்ரீ கரைமேல் அழகா் அய்யனாா், ஸ்ரீ பூரணா, ஸ்ரீ புஷ்கலா சமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர அய்யனாா், ஸ்ரீ சங்கிலி கருப்பு மற்றும் பரிவாரத் தெய்வங்களின் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றன. தொடா்ந்து புதன்கிழமை காலை மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நிறைவு பெற்று பூா்ணாஹூதி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து யாகத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீா் நிரம்பிய கடம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து சிவாச்சாரியா்கள் கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். தொடா்ந்து மூலவா்களுக்கு மகா அபிஷேக அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் குலதெய்வ வழிபாட்டு குடும்பத்தினா், ராஜகிரி மற்றும் சுற்று வட்டார கிராம பொதுமக்கள், பக்தா்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்து, சுவாமியை வழிபட்டனா். பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை நாட்டாண்மைகள், கிராமவாசிகள், விழாக்குழுவினா் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...